புதுடெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு!
புதுடெல்லி கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீயில் சிக்கி தவிக்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீவிபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, எனினும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு துணை தலைவர் சுனில் சௌதிரி இது குறித்து தெரிவிக்கையில்... திடீரென ஏற்பட்ட தீ ஆனது, காட்டுதீ போல் வேகமாக பரவிவருகிறது. மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் தீயில் சிக்கியுள்ள நபர்களையும், இறந்த உடல்களையும் மீட்கும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டு வருகின்றனர். முன்னதாக கட்டிடத்தில் தீ பிடித்தது 2 ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மர்ருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் மீட்கப்பட்ட நபர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைப்பெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு தலைமை அதிகாரி விபின் கென்டல் கூறுகையில்., மீட்பு பணியில் 30 வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இல்லை. கட்டிடத்தின் தாய்வாரத்தில் மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபத்தில் சிக்கிய மக்கள் மரப்படிகளில் இறங்க இயலாமல், மாடியில் இருந்து நேரடியாக கீழே குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.