மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று கங்கை நதியில் கரைக்கப்படுகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆகஸ்ட்., 16 ஆம் நாள் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.


வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 


இதையடுத்து, அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் வாஜ்பாயின் அஸ்தியை இன்று கரைக்க உள்ளனர்.



இதைத் தொடர்ந்து நாளை லக்னோவில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் வாஜ்பாய் குடும்பத்தினர் கலந்துக் கொள்கின்றனர். அப்போது வாஜ்பாயின் அஸ்தி கோமதி ஆற்றிலும் கலக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று டெல்லியிலும் அமைதிப் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட உள்ளது...!