Bharuch: குஜராத் மருத்துவமனை கோர தீ விபத்தில் குறைந்தது 18 கோவிட் நோயாளிகள் பலி
குஜராத்தின் பருச்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
புதுடெல்லி: குஜராத்தின் பருச்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குஜராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுமார் 50 நோயாளிகளை, உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
"COVID வார்டில் சிகிச்சை பெற்ற 12 நோயாளிகள் தீ மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட புகையால் உயிரிழந்தனர்" என்று பருச் காவல்நிலைய சரக எஸ்.பி. ராஜேந்திரசிங் சூடாசாமா கூறினார். பிறகு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்தது.
Also Read | Fuel Price Today 01 May 2021: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?
நான்கு மாடியில் செயல்பட்டு வந்த COVID-19 மருத்துவமனை பருச்-ஜம்புசர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை அறக்கட்டளை ஒன்றால் நிர்வகிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்த மருத்துமனையே தங்கள் குடும்பத்தினரின் உயிரை காவு வாங்கிவிட்டதாக மருத்துமனையில் கூடியிருப்பவர் அழுவது நெஞ்சை பிளப்பதாக இருக்கிறது.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் இந்த விபத்துக்கு மருத்துவமனை நிர்வாகத்தை குற்றம் சாட்டினர்.
Also Read | அல்டிமெட் ஸ்டார் அஜித்துக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்துகள்
கிளர்ச்சியடைந்த உறவினர்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 190 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 18 கொரோனா வைரஸ் நோயாளிகள் இறந்தனர்.
"தீ மிகவும் தீவிரமாக இருந்தது, ஐ.சி.யூ வார்டு கிட்டத்தட்ட முழுவதுமாக எரிந்து போய்விட்டது. வென்டிலேட்டர்கள், மருந்துகள் போன்றவற்றை பாதுகாத்து வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன கிடங்குகள் என அனைத்தும் சாம்பலாகிவிட்டன" என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த கோவிட் நோயாளிகளின் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதே கடினமாகிவிட்ட சூழ்நிலை சோகத்தை அதிகரித்துள்ளது.
தீயில் இருந்து தப்பிய நோயாளிகளை பிற மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணிகளும் மும்முரமாக தொடர்கின்றன.
Also Read | கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மீட்புக் குழுக்களுடன், உள்ளூர்வாசிகள் பலரும் இணைந்து, நோயாளிகளை மீட்பதற்கும், அவர்களை ஆம்புலன்ஸ்களுக்கு மாற்றுவதற்கும் உதவுகின்றனர்.
சக்கர நாற்காலிகளோ அல்லது ஸ்ட்ரெச்சர்களோ இல்லாத நிலையில் துணியைப் தற்காலிக ஸ்ட்ரெச்சர்களாக பயன்படுத்தி பல நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர்.
சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட காவல்துறையின் பல வாகனங்களும் அந்த இடத்தை அடைந்தன.
மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒரு நோயாளியின் உறவினர் தீ விபத்துக்குப் பிறகு கொட்டப்பட்ட கழிவுகளின் குவியலில் இருந்து, தனது உறவினரின் மருத்துவ ஆவணங்களைத் (Medical File) தேடுவதையும் காண முடிந்தது.
Also Read | கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR