இந்திய தேர்தல் ஆணையத்தை பாராட்டிய ஆஸ்., சிறப்பு தூதர்!
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆஸ்திரேலியே சிறப்பு தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்!
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆஸ்திரேலியே சிறப்பு தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்., இந்திய வாக்குசாவடிகள் என்னை வியப்படைக்க வைக்கின்றன. இத்தனை வாக்காளர்களை இங்கு வரவழைப்பது எவ்வளவு கடினமான விஷயம் எனபது எனக்கு புரிகிறது. இந்த கடினமான இலக்கை இந்திய தேர்தல் ஆணையம் திறம்பட செய்து வருகின்றது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய சிறப்பு தூதர் ஹரிந்தர் சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல 7- கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று 6 -ஆவது கட்டமாக 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிடுவதற்காக இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய சிறப்பு தூதர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்த அவர், இங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தான் தேர்தல் அமைதியாக நடைப்பெற்று வருகிறது என்று தெளிவுப்பட தெரிகிறது. மேலும் மக்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கை ஒப்புகை சீட்டு முறை மூலம் சரிபார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதும் பாராட்டக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.