26 ஆயிரத்திற்கு வாங்கிய செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு புதிய விதிப்படி ரூ.47,500 அபாரதம்
7 நாட்களுக்கு முன்பு செகண்ட் ஹேண்ட் முறையில் 26 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு உதவி செய்ய தான் யாரும் இல்லை என ஆட்டோ உரிமையாளர் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்: நாடு முழுவதும் திருத்தப்பட்ட 2019 மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், வாகன ஓட்டிகளிடம் ஒருவிதமான பதற்றம் காணப்படுகிறது. அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் கடுமையான அபராதத்தை எதிர்கொள்கின்றனர். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவது எல்லா இடங்களிலிருந்தும் அபாரதம் (Traffic Challan) குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இன்று (புதன்கிழமை) ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் (Bhubaneswar) இதேபோன்ற ஒரு செய்தி வந்துள்ளது. அங்கு ஒரு ஆட்டோ டிரைவருக்கு 47,500 ரூபாய்க்கு அபராதம் போடப்பட்டுள்ளது. அதாவது அங்கீகரிக்கப்படாத நபரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக ரூ.5,000, ஓட்டுநர் உரிமம் இல்லாததால் ரூ.5000, குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ரூ.10,000, மாசுபாடு ரசிது இல்லாததற்கு ரூ.10,000, பதிவு செய்யாமல் எஃப்.சி. வாகனத்தைப் பயன்படுத்தியதற்க்கு ரூ.5000, அனுமதி நிபந்தனைகளை மீறியதற்காக ரூ.10,000, காப்பீடு இல்லாமல் ரூ.2000 மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது மொத்த அபராதத்தொகை ரூ.47,500 ஆகும். ஓட்டுநர் சல்லசேகர்பூரில் உள்ள ஓட்டுநர் சோதனை மையத்தில் அபராத தொகையை டெபாசிட் செய்யுமாறு போக்குவரத்து போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.47,500-க்கு அபாரதம் போட்டப்பின்னர், அதுக்குறித்து ஆட்டோ உரிமையாளர் கூறுகையில், "இந்த ஆட்டோவை 7 நாட்களுக்கு முன்பு செகண்ட் ஹேண்ட் முறையில் 26 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன. அவற்றை போக்குவரத்து அதிகாரிகளுக்குக் காட்ட முடியும். ஆனால் இப்போது எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக் கூறினார்.