கடந்த 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதல் முறையாக மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு பணி நியமனம் அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று பேரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவானி சதுர்வேதி இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார்.


கடந்த வாரம் வரை இவர் மற்றொரு விமானியின் துணையுடன் போர் விமானங்களில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். பயிற்சி முடிவடைந்ததை அடுத்து,  குஜராத்தில் உள்ள ஜாம் நகர் விமானப்படை தளத்தில் உள்ள எம்.ஐ.ஜி.ல் 21 ரக போர் விமானத்தை ஆவானி சதுர்வேதி தனியாக ஓட்டினார். இந்த போர் விமானம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதன் மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை ஆவானி சதுர்வேதி பெற்றுள்ளார்.