ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை பார்வை வரம்பு தொலைவிற்கு அதாவது 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், 250 கிராம் முதல் 150 கிலோ வரை டுரோன்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான நானோ மற்றும் மைக்ரோ டிரோன்கள் குழந்தைகள் விளையாட்டு பொம்மையாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட எடை கொண்ட டிரோன்களை பயன்படுத்த முறையாக பதிவு செய்து அடையாள எண் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஆங்கில அறிவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. மேலும், இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் 1, 2018 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.