அயோத்தியின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ இழப்போ இல்லை என பொறியாளர் மொஹமட் சலீம் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் புனிதத் தளமான அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் எங்களுக்கு தான் சொந்தம் என இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற ஊரில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் ராமர் கடவுளுக்கு இந்துக்கள் கோவில் கட்டலாம் என்று இந்தியாவின் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு நகரத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனித்தனியாக வழங்கவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 


இந்நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் மொஹமட் சலீம் பொறியாளர் அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றி அல்லது இழப்பு அல்ல என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; "இந்த தீர்ப்பு யாருடைய வெற்றி அல்லது இழப்பு அல்ல. நீதி, அமைதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்புகளை வலுப்படுத்துவது மற்றும் நாட்டை அவர்களுடன் முன்னோக்கி கொண்டு செல்வது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று  அஜித் டோவலின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தில் பேசிய மொஹமட் சலீம் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


மேலும், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற மதங்களுக்கு இடையிலான நம்பிக்கை கூட்டத்தில் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.