ராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது வழக்கு!
ராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்!!
ராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்துக்களை அவதூறாக பேசியதாக கூறி, யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் சன்னியாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும் வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், எல்லையில் போராடும் ராணுவ வீரர்களின் செயல்கூட வன்முறை என்றுதான் யெச்சூரி கூறுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இதிகாசங்களை இழிவுபடுத்தும் சீதாராம் யெச்சூரி தனது பெயரில் உள்ள சீதாராமை நீக்க வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவையும், வன்முறை நிகழ்வுகளால் நிரம்பியவை தான் என சீதாராம் யெச்சூரி கூறியிருந்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள, யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட துறவிகள், உத்தரகண்ட் மாநில காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இழிவுபடுத்திய சீதாராம் யெச்சூரி, இந்து மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் துறவிகள் வலியுறுத்தியுள்ளனர்.