பிரபல பேட்மிண்டன் வீரரும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் புதன்கிழமை (ஜனவரி 29) பாஜகவில் சேர உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

29 வயதான சாய்னா நேவால், இதுவரையில் 24 சர்வதேச விருதுகளை பேட்மிண்டன் விளையாட்டில் வென்றுள்ளார். பெண்கள் ஒன்றையர் பேட்மிண்டன் போட்டியில், லண்டனில் கடந்த 2012 ஆம்  ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சாய்னா நேவால், பத்ம பூஷண் விருதை பெற்றிருந்ததார்.


இந்நிலையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்று நேரத்தில், டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.