உயர்கல்வி நிறுவனகளின் NIRF Ranking-ல் பெங்களூரு முதலிடம்!
உயர்கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2018-னை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பெங்களூருவின் Indian Institute of Science முதலிடம் பெற்றுள்ளது!
உயர்கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2018-னை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பெங்களூருவின் Indian Institute of Science முதலிடம் பெற்றுள்ளது!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மாநிலங்களுக்கான மனிதவள அமைச்சர் சத்ய பால் சிங் ஆகியோர் இந்த அறிவிப்பினை இன்று டெல்லி விஜயன் பவனில் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தரவரிசைப்படுத்த ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் தேசிய நிறுவன ரேங்கிங் கட்டமைப்பு (NIRF) குழுவால் வெளயிடப்படுகிறது.
இந்தாண்டு இந்தப் பட்டியில் மருத்துவம், பொறியில் கட்டமைப்பு, சட்டம் போன்ற கூடுதல் பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள், பொறியியல், மேலாண்மை மற்றும் மருந்தகம் ஆகிய பிரிவுகள் கடந்த 2016-ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. அதேப்போல் 2017-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மற்றும் கல்லூரி பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.