இந்தியாவில் எங்கு இருக்கிறார் ஷேக் ஹசீனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
கடந்த திங்களன்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக தற்போது சொந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்துள்ளார். விரைவில் இங்கிலாந்தில் குடிபெயர உள்ள இவர், நாட்டில் பிரச்சனை அமைதி ஆகும் வரை இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 76 வயதாகும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஒருமாதமாக பங்களாதேஷில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறி உள்ளார். தற்போது இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததை தொடர்ந்து அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இங்கிலாந்தில் உள்ள அவரது சகோதரி ரெஹானா அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். இங்கிலாந்தில் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவுடன் இந்தியாவில் இருந்து கிளம்ப உள்ளார்.
மேலும் படிக்க | வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்?!
ஷேக் ஹசீனாவின் சகோதரி ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஷேக் ஹசீனா நேற்று வங்கதேசத்தில் இருந்து புறப்பட்டு இந்திய விமானப்படையின் உதவியுடன் இந்தியா வந்தடைந்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய மூத்த அதிகாரிகள் அவரை சந்தித்து அவரை பாதுகாப்பாக வைத்திருப்பதாக உறுதியளித்தனர். ஷேக் ஹசீனாவை இப்போது இந்திய விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புக் குழுக்கள் கவனித்து வருகின்றன. தற்போது டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்லவுள்ளார். மேலும் இன்று இந்தியாவில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகளை சந்திக்கிறார். பங்களாதேஷில் என்ன நடக்கிறது என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைகளை தொடர்ந்து வங்கதேச எல்லையில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில்கள் மற்றும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, 1971ல் விடுதலை போரில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதியால் அந்நாட்டில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து தற்போது பதவி விலகியுள்ளார். ஷேக் ஹசீனா நீண்ட காலமாக பங்களாதேஷின் பிரதமராக இருந்து வருகிறார். அவரது ஆட்சியில் அடிக்கடி கலவரங்கள் வெடித்துள்ளது. இவருக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நிறைய சண்டைகள் வெடித்துள்ளது. மேலும் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹசீனா தலைவர் பதவியில் இருந்து விலகிய உடனேயே, அந்நாட்டு ராணுவ தலைவர் தற்காலிக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
வங்கதேசத்தில் நடந்தது என்ன?
பங்களாதேஷ் அரசு வேலைகளில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி அந்நாட்டு மாணவர் குழுக்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்கள், வன்முறையாக மாறி வங்காளதேசம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. 1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வங்கதேச மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை காரணமாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இருப்பினும், இது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை. இந்த வன்முறையில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ