2 நாள் ஸ்ட்ரைக்! ஏடிஎம் சேவை, பணப் பரிவர்த்தனை பாதிக்கும்!
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்ப போராட்டம் அறிவித்துள்ளதால் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்ப போராட்டம் அறிவித்துள்ளதால் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5-ம் தேதி மும்பையில், வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவராத்தையில், வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக 2% அளவிற்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வந்தது.
ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஊதிய உயர்வினை வருவாய் அடிப்படையினில் உயர்த்தாமல், வேலைசுமையின் அடிப்படையில் உயர்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களில் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.