முதல் முறையாக் காஷ்மீரில் பயங்கரவாதிகள் இல்லா மாவட்டமாக பராமுல்லா

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தை `பயங்கரவாதிகள் இல்லா மாவட்டம்` என மாற்றி உள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ டெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தை "பயங்கரவாதிகள் இல்லா மாவட்டம்" என மாற்றி உள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அதன் பின்னர், பாரமுல்லா மாவட்டத்தை "பயங்கரவாதிகள் ஃப்ரீ" மாவட்டம் என ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதை சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்கள சோயப் ஃபுரூக் அகுன், மொஹ்சின் முஸ்தாக் பட் மற்றும் நாசீர் அஹமது டார்சி ஆகும்
இதனையடுத்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் டிஜிபி தில்பாக் சிங், பராமுல்ல மாவட்டத்தில் நேற்று மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், இதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இல்லா மாவட்டமாக பராமுல்ல மாவட்டம் உள்ளது என தெரிவித்துள்ளார்.