கடந்த சில மாதங்களுக்கு முன் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும், மாட்டிறைச்சி விற்பனை கூடரங்களுக்கும் மத்திய அரசு திடிரென தடை விதித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தடை உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, புதுச்சேரி, மேகாலயா ஆகிய மாநில சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.


இந்திலையில், இந்த தடையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை மக்கள் தவறுதலாக புரிந்து கொண்டனர். இந்த தடையால் விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிப்பு அடைய மாற்றார்கள் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.