சீன துருப்புகள் லடாக்கில் இருந்து பின் வாங்கியதற்கு முன்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பேச்சு வார்த்தையில் வருங்காலத்தில் இது போன்ற பதற்றங்களை தவிர்ப்பதற்கும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.


புதுடெல்லி(New Delhi): தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் (Ajit Doval) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) மாலை வீடியோ கால் மூலம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | இந்தியாவின் பராக்கிரமத்தை கண்டு அஞ்சி  லடாக்கில் பின் வாங்கும் சீனா...!!!


சீனா(China), இந்தியாவுடனான உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் கால்வான் பள்ளத்தாக்கில் பதற்றங்களைத் தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் படைகள் பின் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது கூடாரங்களையும் கட்டமைப்புகளையும் அகற்றுவதைக் காண முடிந்தது.


சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian), பதற்றங்களைத் தணிக்க,  படைகள் பின்வாங்கப்படும் என்றார். முந்தைய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை செயல்படுத்த இரு தரப்பினரும் தொடர்ந்து செயலாற்றி வருவதால், சீன மற்றும் இந்திய துருப்புக்கள் ஜூன் 30 அன்று கமாண்டர் நிலையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அவர் கூறினார் என ANI கூறியது.


ALSO READ | Somaliland தைவான் இடையிலான ஒப்பந்தத்தினால் அதிர்ச்சியில் உள்ள சீனா..!!!


 


"இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதோடு, இராணுவ மற்றும் இராஜீய அளவில் நெருக்கமாக தகவல்தொடர்புகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும், எல்லைப் பிராந்தியத்தில்  பதற்றத்தை தணிக்க கூட்டாக செயல்படும் என நாங்கள் நம்புகிறோம்" என்று ஜாவோ கூறினார்.


புதுடில்லியில் உள்ள அரசாங்க வட்டாரங்கள், சீன இராணுவம்  தனது கூடாரங்களையும் வாகனங்களையும் அகற்றுவதைக் கண்டதாகவும், கால்வான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1-1.5 கி.மீ. பரப்பளவிற்கு பின் வாங்கி செல்வதாகவும் கூறியதை தொடர்ந்து ஜாவோ லிஜியனின் இவ்வாறு கூறினார்.


கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) ஜூன் 15 ம் தேதி இரு நாட்டின் இராணுவத்திற்கு இடையில் வன்முறை மூண்டதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.


இந்திய மற்றும் சீனப் படைகள் கடந்த ஏழு வாரங்களாக கிழக்கு லடாக்கில் பல இடங்களில்மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.