பெங்களூரில் காஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
பெங்களூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஈஜிபுரா என்ற இடத்தில் இன்று காலை திடீரென ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்தவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.