கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு பிளாஸ்டிக் கவரில் அன்பளிப்பு அளித்த பெங்களூரு மேயர் கங்காபிகே மல்லிகார்ஜூனாவிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறி முதல்வர் எடியூரப்பாவிற்கு பிளாஸ்டிக் கவரில் அன்பளிப்பு கொடுத்ததற்காக, கங்காபிகே மல்லிகார்ஜூனாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வணிகர்களை மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தடையை மீறி , பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்படுத்துதல், பதுக்கிவைத்தல் போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை, கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜூனா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிளாஸ்டிக் பையில் வைத்து உலர் பழங்களை வழங்கினார். 


இந்த காட்சிகள், டிவி சமூக வலைதளங்களில் வெளியாகி சுற்றுச்சூழல் அர்வலர்கள் இடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தடையை மீறி மேயர் எப்படி பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மேயர் தாமாக முன்வந்து நேற்று பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்கான அபராதம் ரூ.500-ஐ செலுத்தினார். இதற்கான ரசீதும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.