மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் வாழ்க்கை, நாட்டிற்காக கடினமாக உழைக்க நம்மை ஊக்கப்படுத்துகிறது என மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தினார்.


அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், என் நண்பனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நாள் வரும் என நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை என்ற சுமை என் இதயத்தில் என்றும் இருக்கும்.


அருண் ஜெட்லி மிகவும் திறமையானவர், பன்முக ஆளுமை கொண்டவர். அவருக்கு எந்த வேலையை ஒதுக்கினாலும், அவர் அதனை திறம்பட செய்து முடிப்பார். அவரது இழப்பு எனக்கு துயரத்தை அளிக்கிறது. அவரது நினைவுகளை நாம் என்றும் நினைவில் கொள்வோம். அவரது வாழ்க்கை, நாட்டிற்காக நம்மை கடினமாக உழைக்கத் தோன்றும் என குறிப்பிட்டு பேசினார்.


இதனிடையே, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் உருவச்சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.