சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான BJP வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் மக்களவை தேர்தலோடு நடைபெறவுள்ள சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் சட்ட பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.


அந்த வகையில் அருணாச்சல பிரதேசம் தொகுதி வேட்பாளர்கள் 6 பெயர், சிங்கிம் தொகுதி வேட்பாளர்கள் 12 பேர் பெயர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.


குறிப்பிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலும் இம்மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


32 உறுப்பினர்கள் கொண்ட சிக்கிம் சட்டசபை மற்றும் 60 உறுப்பினர்கள் அருணாச்சல பிரதேச சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அருணாச்சல பிரதேசம் முதல்வர் பெமா கந்து (Pema Khandu) முட்டு (Mukto) சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பட்டியலை BJP தலைவர் அமித் ஷாவின் தலைமையில் நடைப்பெற்ற பாஜ கூட்டத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.