பொது தேர்தலில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்கும் பாஜக -அமித் ஷா!
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!
டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மாஸ்வராஜ், நிதின்கட்காரி, சுரேஷ்பிரபு, மூத்த தலைவர் அத்வானி, மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பாஜக தலைவராக பதவி வகித்து வரும் அமித்ஷாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதை ஒத்தி வைத்து விட்டு, அமித்ஷா தலைமையிலேயே மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அமித் ஷா மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தலைவர் அமித்ஷா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இருப்பதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான யுக்திகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் பெட்ரோல், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் எழுப்பி வரும் நிலையில் இத்தக விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது!