பாபா சாஹேப் அம்பேத்கர் வழியில் 370 பிரிவு நீக்கத்துக்கு ஆதரவளித்தோம்: மாயாவதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் சற்று யோசித்திருக்க வேண்டும், அது நன்றாக இருந்திருக்கும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை குறித்து பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் வழியில் தான் சட்டபிரிவை 370ஐ மத்திய அரசு நீக்கியதற்கு ஆதரவளித்தோம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்த்துள்ளார்.
இதுக்குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில்,
1. பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எப்போதும் நாட்டின் சமத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, எனவே அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனியாக 370வது சிறப்பு பிரிவை வழங்குவதற்கு ஆதரவாக இல்லை. இந்த காரணத்திற்காக தான் பகுஜன் சமாஜ் கட்சி 370 பிரிவு நீக்கத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்தது.
2. ஆனால் இந்த அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 370 வது பிரிவு நீக்கியதன் காரணமாக, அங்கு நிலைமை இயல்பானதாக மாற சில காலம் ஆகும். சற்று காத்திருப்பது நல்லது. இதையே தான் மாண்புமிகு நீதிமன்றமும் கருதுகிறது.
3. இதுபோன்ற சூழ்நிலையில், சமீபத்தில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் அனுமதியின்றி காஷ்மீர் செல்ல முயற்சித்தார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் அரசியல் செய்ய வாய்ப்பு அளிப்பது போன்றதல்லவா? அங்கு செல்வதற்கு முன்பு சற்று யோசித்திருக்க வேண்டும், அது நன்றாக இருந்திருக்கும்.
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.