ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டில் மாற்றம்... 65% ஆக உயர்வு - பீகாரில் நிறைவேறியது தீர்மானம்!
Bihar Caste Based Reservation Hike: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதாவை பீகார் சட்டப்பேரவை இன்று ஒருமனதாக நிறைவேற்றியது.
Bihar Caste Based Reservation Hike: பீகாரில் ஜாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வகையில், பீகாரில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர். இந்துக்கள் மொத்தம் 81.99 சதவீதமாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 17.70 சதவீதத்தினரும், கிறிஸ்துவர்கள் 0.05 சதவீதத்தினரும், சீக்கியர்கள் 0.011 சதவீதத்தினரும், பௌத்தர்கள் 0.0851 சதவீதத்தினரும் மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் 0.0096 சதவீதத்தினரும் இருக்கின்றனர் என அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் அடிப்படையில் பல்வேறு தரப்பிலான சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
75% இடஒதுக்கீடு
அதில், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதத்தினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36 சதவீதத்தினரும், பட்டியலிடப்பட்ட சாதி 19.65 சதவீதத்தினரும் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1.6 சதவீதத்தினரும் இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த வகையில், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதாவை பீகார் சட்டப்பேரவை இன்று நிறைவேற்றி உள்ளது. மேலும், இந்த மசோதா 75% இடஒதுக்கீடு கட்டமைப்பிற்கு வழி வகுத்துள்ளது எனலாம். இந்த விரிவுபடுத்தப்பட்ட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (EBC) 43% ஆக ஒதுக்கப்படும்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்த்தப்பட்ட பிரிவினருக்கு (EWS) 10% ஒதுக்கீட்டுடன் 50% இடஒதுக்கீடு பீகாரில் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், நிதிஷ் குமார் அரசின் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், அது தற்போதுள்ள 50% இடஒதுக்கீடு வரம்பை தாண்டி, மொத்தம் 65% இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 10% அப்படியே இருக்கும். இதனால், மாநிலத்தில் விரிவான 75% இடஒதுக்கீடு கிடைக்கும்.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணியில் தொய்வா? நிதீஷ் குமாருடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
எந்தெந்த பிரிவுக்கு எவ்வளவு உயர்வு?
மாநிலத்தில் சமீபத்திய சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இடஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவெடுத்தார். OBC மற்றும் EBS ஒதுக்கீட்டை 30 இல் இருந்து 43 சதவீதமாகவும், பட்டியலிடப்பட்ட சாதி ஒதுக்கீடு 16இல் இருந்து 20 சதவீதமாகவும், மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளனர். இதற்கிடையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்த்தப்பட்ட பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு தற்போதைய 10 சதவீதத்தில் மாறாமல் இருக்கும்.
ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் OBC சமூகத்தினர் 27.13 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணைப்பிரிவு 36 சதவீதமாகவும், SC மற்றும் ST சமூகத்திற்கான கூட்டுப் பங்கு 21 சதவீதமாகவும் உள்ளது. சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, மாநிலத்தில் 2.97 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், 94 லட்சத்திற்கும் அதிகமான (34.13 சதவீதம்) மாத வருமானம் ரூ. 6,000 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.
ஒருமனதாக நிறைவேற்றம்
பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023 அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக வெளிப்படையாக மசோதாவை ஆதரித்தது, இருப்பினும் மசோதாவில் EWS இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு இல்லாதது பற்றி கவலை தெரிவித்தது. சட்ட மேலவை மற்றும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த மசோதா சட்டமாக மாறும். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்கம் குறித்து கமெண்ட்! என்ன பேசினார் பீகார் முதலமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ