Bihar Caste Based Census: நாட்டிலேயே முதல்முறையாக சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட நிலையில், இன்று அந்த கணக்கெடுப்பின் முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் பலரையும் புருவம் தூக்க வைத்துள்ளது எனலாம். பீகாரின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 13.1 கோடி ஆகும். இந்நிலையில், பீகார் முழுவதும் நடத்தப்பட்ட சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்...


அதாவது, பீகாரில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர், அவர்கள் மொத்தம் 81.99 சதவீதமாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 17.70 சதவீதத்தினரும், கிறிஸ்துவர்கள் 0.05 சதவீதத்தினரும், சீக்கியர்கள் 0.011 சதவீதத்தினரும், பௌத்தர்கள் 0.0851 சதவீதத்தினரும் மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் 0.0096 சதவீதத்தினரும் இருக்கின்றனர். இவர்களின் அடிப்படையில் பல்வேறு தரப்பிலான சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.


சாதி அடிப்படையில்...


அதில், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதத்தினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36 சதவீதத்தினரும், பட்டியலிடப்பட்ட சாதி 19.65 சதவீதத்தினரும் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1.6 சதவீதத்தினரும் பீகாரின் மக்கள் தொகையில் பங்களிப்பதாக அம்மாநில அரசால் தற்போது நடத்தப்பட்டுள்ள சாதி வாரியான கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | மண்டல் vs கமண்டலம் : தொடங்குகிறது ஜாதிவாரி கணக்கெடுப்பு - யாருக்கு பயன்?


யாதவர்கள் எத்தனை சதவீதம்?


மேலும் மேலே குறிப்பிட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்கள் தான் சமூக ரீதியில் கடுமையான ஒடுக்குதலையும், தீண்டாமையையும் எதிர்கொள்கின்றனர். பொது குழுவினர் 16 சதவீதமாக உள்ளது. அதாவது அவை மேலே உள்ள எந்த குழுக்களையும் சேர்ந்தவை அல்ல. 


பீகாரில் மிகவும் பொதுவாக காணப்படும் சமூகமான யாதவர்கள் 14.27 (OBC Category) சதவீதத்தை மக்கள் தொகையில் பங்களிப்பதாக இந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பிராமணர்கள் 3.6 சதவீதத்திலும், ராஜபுத்திரர்கள் 3.4 சதவீதத்திலும், குர்மிகள் 2.8 சதவீதத்திலும், குஷ்வாஹாக்கள் 4.2 சதவீதத்திலும், டெலிஸ் 2.8 சதவீதத்திலும் மற்றும் பூமிஹார்ஸ் 2.8 சதவீதத்திலும் உள்ளதாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முசாஹர்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் ஓடுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாகும். இவர்கள் பீகார் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ளனர்.


மக்கள் தொகையில் 63.1 சதவீதம் இவர்கள்தான்!


தற்போது சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உட்பட ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகளையும் அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காக இருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, பீகாரின் மொத்த மக்கள் தொகையில் 63.1 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகும்.


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவை பீகார் அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் எடுத்தது. பீகார் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று முதலமைச்சர் நிதீஷ் குமார் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்ய அதாவது, "மத்திய அரசை தவிர வேறு எந்த அமைப்புக்கும் மக்கள் தொகையை நடத்தத் தகுதியில்லை..." என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கான பொருளாதார நிலை மற்றும் சாதி பற்றிய தரவுகளை மட்டுமே சேகரித்து வளர்ச்சிக்கு விதிடும் என நிதிஷ் குமார் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அதிர்ச்சி தந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு... 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ