காங்கிரஸில் வினேஷ் போகத்... ரயில்வே பணியையும் ராஜினாமா செய்தார்... பின்னணி இதுதான்!
Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Vinesh Phogat Joined Congress Party: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை இன்று ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து வினேஷ் போகத் அவரது X பக்கத்தில் ராஜினாமா கடித்தத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில்,"எனது வாழ்க்கையின் இந்தத் தருணத்தில், ரயில்வே பணியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடிவு செய்து, எனது ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வே அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த இந்திய ரயில்வேவுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா தேர்தலில் போட்டி?
சில நாள்களுக்கு முன் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த வினேஷ் போகத் மற்றும் அவரின் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியோ ஆகியோரும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். ராகுல் காந்தியை சந்தித்தபோதே அவர்கள் காங்கிரஸில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன.
மேலும் படிக்க | வினேஷ் போகத் கடந்து வந்த 'ஓராயிரம்' சோதனைகள்... இந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது!
அந்த வகையில், வினேஷ் போகத் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது அவர் காங்கிரஸில் இணைய உள்ளார் என்ற தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. மேலும், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை இன்று சந்தித்தனர். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருவரும் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தனர்.
காங்கிரஸில் இணைந்து ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி சார்பில் வினேஷ் போகத் மட்டும் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழுவில் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம் முதல் ஒலிம்பிக் வரை
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராக இருந்த முன்னாள் பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சிங் மீது வீராங்கனைகள் தொடர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இருப்பினும் அவர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறி மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் டெல்லி வீதிகளில் இரவு, பகல் பாராமல் போராட்டம் நடத்தினர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர்தான் தலைமை தாங்கினர். பிரிஜ் பூஷன் சிங் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் கூட அடுத்த நடைபெற்ற தலைவர் தேர்தலிலும், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றதால் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டையில் 50 கிலோ எடைபிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் விளையாட்டுக்கான நடுவர் மன்றம் வரை சென்றும் அவருக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் வினேஷ் போகத்தை கொண்டாடி தீர்த்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் எனக்கு சதி நடக்கும் என 3 மாதங்களுக்கு முன்பே சொன்ன வினேஷ் போகத்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ