புலன் விசாரணையில் Chinese Spy அளித்த பகீர் தகவல்கள்: பீதியில் பாதுகாப்பு நிறுவனங்கள்!!
கொல்கத்தாவின் செல்வாக்கு மிக்க அந்தப் பெண்மணி கொடுக்கும் ஆவணங்களை சீன மொழியில் மொழிபெயர்த்து, சீனாவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று குயின்சிக்கு தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: உளவு பார்த்த வழக்கில் சிக்கிய பெண்ணான குயின்சியிடம் மெற்கொள்ளப்பட்ட விசாரணையில், சீன உளவாளி அமைப்பை (Chinese Spy Network) குறித்து ஒரு பெரிய வெளிப்பாடு வந்துள்ளது. பிரதமர் அலுவலகம் (PMO) உள்ளிட்ட பெரிய பல அலுவலகங்களின் ரகசிய தகவல்களை வழங்குமாறு சீனா தனது 'இந்திய உளவு குழுவிடம்' கேட்டுக் கொண்டது என்று புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் பற்றிய தகவல்களும் கோரப்பட்டன
சீனா தனது உளவாளிகளை தரப்படுத்தலுக்கு ஏற்ப தகவல் தருமாறு கேட்டுக் கொண்டது. உதாரணமாக, பெரிய அலுவலகங்களில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் நபர்கள், ஊழியர்களில் அதிக செல்வாக்கு உள்ள நபர்கள், என இவர்களைப் பற்றிய தகவல்கள் கோரப்பட்டன. இந்தத் தகவல்களைப் பெற, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க பெண்ணுடன், சீன மகாபோதி கோயிலின் தலைவர், குயின்சியை அறிமுகப்படுத்தினார்.
ALSO READ: கேரளா மேற்குவங்களத்தில் பயங்கரவாதிகள் கைது.. NIA அதிரடி நடவடிக்கை..!!!
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் மனைவிக்கு தகவல்கள் அனுப்பப்பட வேண்டி இருந்தன
கொல்கத்தாவின் செல்வாக்கு மிக்க அந்தப் பெண்மணி கொடுக்கும் ஆவணங்களை சீன மொழியில் மொழிபெயர்த்து, சீனாவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று குயின்சிக்கு தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த விசாரணையில், இந்த ஆவணங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் மனைவி திருமதி டிங் மற்றும் திரு. சோவுக்கு அனுப்பப்படவிருந்தன என்று அறியப்பட்டுள்ளது.
சீனப் பெண் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெளிவந்த தகவல்கள் பாதுகாப்பு நிறுவனங்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் அறிக்கையின் அடிப்படையில் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. கொல்கத்தா உட்பட பல இடங்களில் பலர் விசாரிக்கப்படுகிறார்கள்.
இந்த வழக்கில், டெல்லி காவல்துறையின் (Delhi Police) சிறப்புக் குழு கடந்த மாதம், பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, ஒரு சீனப் பெண் மற்றும் அவரது நேபாள கூட்டாளி ஷேர் பகதூர் ஆகியோரை கைது செய்தது நினைவிருக்கலாம். மூவரும் இப்போது திஹார் சிறையில் உள்ளனர்.
ALSO READ: ‘ஒவ்வொரு தகவலுக்கும் 1000 டாலர்’: சீனாவுக்கு தகவல்களை விற்ற Rajiv Sharma கைது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR