Mother Threw Son In Crocodile Canal: அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வாய் பேச இயலாத தனது மகனை ஒரு தாய் முதலைகள் இருக்கும் ஒரு ஏரியில் வீசிய சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 6 வயது சிறுவன் பாதி சிதைந்த உடலுடன் நேற்று ஏரியில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான சாவித்திரி. இல்லத்தரசியான இவருக்கும் 36 வயதான அவரின் கணவர் ரவிக்குமாருக்கு அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 வயதான வினோத் என்ற மகன் உள்ளார். இவருக்கு வாயும் பேசாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த ஜோடிக்கு 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளார். 


சிறுவனை தூக்கியெறிந்த தாய்


ரவி குமார் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மகன் வினோத் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் தொடர்ந்து ரவி குமார் அந்த சிறுவனை சித்ரவதைக்கு ஆளாக்கி வந்தார். மேலும், ஏரியில் தூக்கியெறிந்து வினோத்தை கொன்றுவிடலாம் என ரவி குமார் சாவித்திரியிடம் கூறியுள்ளார். 


தொடர்ந்து ரவி குமார் கொடுத்த கொடுமையை தாங்காமல் கடந்த சனிக்கிழமை அன்று வினோத்தை கொண்டுச் சென்று முதலைகள் அதிகம் உள்ள ஏரியில் தூக்கிவீசியுள்ளார். தொடர்ந்து அந்த ஏரியில் உள்ள முதலைகள் வினோத்தின் உடலை குதறியுள்ளது. அதன் மிச்சம் மீதிதான் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!


விடிய விடிய நடந்த தேடுதல்


சாவித்திரி சிறுவனை ஏரியில் வீசுவதை பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் அளித்தனர். தொடர்ந்து அந்த ஏரியில் போலீசார், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். விடிய விடிய தேடுதல் நடந்தது. சனிக்கிழமை சாவித்திரி சிறுவனை ஏரியில் வீசிய நிலையில், நேற்று காலை போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. 


போலீசார் கண்டெடுத்த உடலில் சிறுவனின் ஒரு கை முழுவதுமாக காணவில்லை. அவனின் உடல் முழுவதும் முதலைகள் கடித்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இதன்மூலம், முதலை கடித்து அந்த சிறுவன் உயிரிழந்தது உறுதியானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் விசாரணை செய்து வருகின்றனர். ரவி குமார் மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் போலீசாரால் கைதும் செய்யப்பட்டனர். 


சாவித்திரி இந்த சம்பவம் குறித்து கேட்கையில்,"இதற்கு என் கணவர் தான் காரணம். அவர் எப்போதும் என் மகன் சாக வேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருப்பார். என் மகன் சாப்பிட மட்டும் செய்கிறான், வேறு ஒன்றும் செய்ய மாட்டான் என அவர் தொடர்ந்து குறைச்சொல்லி வந்தார். இருந்துவிட்டு போகட்டுமே அதற்கு என்ன என நான் சொல்வேன். 


என் கணவர் இதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என் மகன் எவ்வளவு சித்ரவதையைதான் தாங்குவான், சொல்லுங்கள்... நான் என் வலியை எங்கு சென்று பகிர்ந்துகொள்ள, சொல்லுங்கள்..." என தனது மன வேதனையையும் அந்த தாய் சாவித்திரி வெளிப்படுத்தினார். மிகவும் இரும்பு மனதுடன்தான் இந்த சம்பவத்தை சாவித்திரி செய்திருப்பார் என அவர் வாக்குமூலத்தின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் படிக்க | கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ