பாட்னா: இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம் உள்ளது. ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்க தவறுவதில்லை. அது நாகரிகத்தின் அடையாளமாக ஆகிவிட்டது. ஆனால் மிகவும் விருப்பமான இந்த உடை அலுவலகத்தின் கண்ணியத்தை காப்பதாக அல்ல என கருதப்படுவதால், இதற்கு தடை விதித்து, பீகார் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


பணி செய்யும் இடத்திற்கு, முறையான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பணி கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதால், மாநில கல்வித்துறை ஊழியர்கள், ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை நிர்வாக இயக்குனர் சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். புதன்கிழமை கல்வித் துறை பிறப்பித்த இந்த உத்தரவில் ஊழியர்கள் அலுவலகங்களில் முறையான ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாதாரண உடையில் அலுவலகத்திற்கு வருவது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு எதிரான முறைசாரா மற்றும் சாதாரண உடைகளில் அலுவலகத்திற்கு வருவது தெரிகிறது. இது கலாச்சாரம் மற்றும் நிறுவனத்தின் கண்ணியத்திற்கு எதிரானது. எனவே, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் முறையான உடையில் அலுவலகத்திற்கு வந்து கண்ணியத்தை பராமரிக்க வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஒரு பல்புக்கு ஒரு லட்சம் கரெண்ட் பில்லா? தொடரும் குளறுபடியால் மக்கள் விரக்தி!


கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர், கூடுதல் செயலர்/ செயலாளரின் தனி உதவியாளர்/ சிறப்புச் செயலரின் தனி உதவியாளர்/ அனைத்து இயக்குநர்கள்/ இணைச் செயலர்கள்/ துணை இயக்குநர்கள் (நிர்வாகம்)/ துணைச் செயலர்கள்/ சிறப்புப் பணி அலுவலர்கள் மற்றும் பிறஅலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளது. 


கடந்த ஏப்ரலில், சரண் மாவட்ட ஆட்சியர் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார், அனைத்து அரசு ஊழியர்களும் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தவிர்த்து அவர்கள் முறையான ஆடை அணீயும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


அலுவலகத்தில் சாதாரண ஆடைகளைத் தடைசெய்யும் நடவடிக்கை ஆரம்பத்தில் பீகார் அரசாங்கத்தால் 2019 ஆம் ஆண்டில் அதன் மாநிலச் செயலக ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டது. அப்போது அரசு ஊழியர்களை அலுவலகத்தில் அலங்கரித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டது. பணியிடத்தில் எளிமையான, வசதியான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த ஆண்டு, அஸ்ஸாம் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், லெக்கின்ஸ் அணிய அசாம் மாநில அரசு அதிரடியாக தடை விதித்தது. அலுவல நேரத்தில் கட்டாயமாக பராம்பரிய உடைகளை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ