பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை 92-ஐ எட்டியுள்ளது; 26 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார், அசாம், மேகாலயா மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி வருகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


அசாம் மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள மீட்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஜெகதீஸ் முகி ஆலோசனை மேற்கொண்டார்.


மேகாலயா மாநிலத்தில் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 12 மாவட்டங்களில் வசிக்கும். சுமார் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92-ஆக அதிகரித்துள்ளது. நவடா அருகே தனாபூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.


மதுபானி நகர் அருகே உள்ள மார்வா கிராமத்தில் மாட்டு கொட்டகைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த மாநிலங்களில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்தினர் கடந்த 6 நாட்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 488 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.