பீகார் வெள்ளப்பாதிப்பு: உயரும் பலி எண்ணிக்கை!
பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு இன்றும் (சனிக்கிழமை) தொடர்கிறது. பலி எண்ணிக்கை 170ஆக உயர்வு.
வெள்ளம் சூழ்நிலை மாநிலத்தின் 15 மாவட்டங்களில் மோசமாகி, மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,688 பஞ்சாயத்துகளில் மொத்தம் 108 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் இடர்பாடு சீராய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் ஆரியா மாவட்டம் உள்ளது, இங்கு 30-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இத்தனை தொடர்ந்து மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 23 பேரும், சித்தமரில் 13 பேரும், சபுல், கிஷங்கன்ஜ் மற்றும் கிழக்கு சம்பரன் மாவட்டங்களில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இராணுவ மீட்பு குழுவினரால் கடந்த 5 நாட்களில் 464,610 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுலதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மாவட்டத்தில் 1,289 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மொத்தம் 392,654 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னணி செய்தி நிறுவனமான ஐ.என்.என்.எஸ் உடன் பேசிய ஒரு அதிகாரி, வரவிருக்கும் நாட்களில் நிலைமையை மேம்படுத்த படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உத்திரப் பிரதேசத்தில், 40-க்கும் அதிகமான உயிரிழப்புகள் நிலவியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறுகிறது. அதிகபட்சமாக பஹாராச் மாவட்டத்தில் 10-க்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.