பீகாரில் வயதான தாய், தந்தையை கவனிக்காமல் விட்டால் சிறைதண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வயதான பெற்றோரை கைவிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தியால் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர். 


உலகளாவிய வயது வாட்ச் இன்டெக்ஸ் தகவலின் படி, வயதானவர்களை (60 ஆண்டுகளுக்கு மேலாக) கவனிப்பதில்லை இந்தியா வருந்துகிறோம். மக்கள்தொகையில் 12% பேர் வயதானவர்கள். அவர்களில் பெரும்பாலோர், கிட்டத்தட்ட 80% கிராமப்புற பகுதிகளில் வாழ்கின்றனர். 40 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர் மற்றும் 73 சதவிகிதத்தினர் படிப்பறிவில்லாதவர்கள். அத்தகைய 90 சதவிகித மக்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை என்பதால் ஆச்சரியம் இல்லை, இதனால் அவர்கள் சேமிப்பு மற்றும் மகன்கள் மற்றும் மகள்களிடமிருந்து பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.


இந்நிலையில், இது போன்ற சம்பவத்தை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெற்றோரை கைவிட்டால் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வயதான தாய், தந்தையை கைவிட்டால் அவர்களின் மகன் மற்றும் மகளுக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்.