பீகார்: 5 வயது சிறுவனை சரமாறியாக தாக்கிய ஆசிரியர் - சுயநினைவை இழந்த பரிதாபம்!
பிகாரில் ஆசிரியர் தாக்கியதில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு 5 வயதான சிறுவன் ஒருவர் டியூசன் பயின்று வந்துள்ளான்.
வழக்கம்போல் இன்று டியூசன் வந்த சிறுவன் அருகில் இருந்த வேறு ஒரு மாணவருடன் படிக்காமல் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களை கண்கானித்து வந்த டியூசன் மைய ஆசிரியர் சோட்டு என்பவர் அந்த சிறுவனை கையில் இருந்த தடியால் அடித்துள்ளார்.
ஆத்திரம் தீர அடித்த சோட்டுவின் தடி உடைந்த நிலையில் அவர் அந்த சிறுவனை கையால் தாக்க ஆரம்பித்துள்ளார். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து சக மாணவர்கள் கத்தி கூச்சலிடவே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், ஆசிரியர் சோட்டுவையும் பலமாக தாக்கி போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR