தேர்தல் நடைபெற சில மணி நேரங்கள் உள்ள நிலையில் டெல்லியில் துப்பாக்கிச்சூடு
டெல்லி சட்டசபை தேர்தல் பாதுகாப்பை மீறி வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர் மர்மநபர்.
புது டெல்லி: பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லியில் தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடும் பாதுகாப்பு இருந்தபோதிலும், இரண்டு பேர் வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுக்குறித்து போலீசார் கூறுகையில், ஹெல்மெட் அணிந்த வந்த ஆண்கள், துணிக்கடையில் நோக்கி இரண்டு முறை சுட்டாதகவும், பின்னர் திறந்தவெளியில் இரண்டு இரண்டு முறை சுட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தனிப்பட்ட பகை இருக்கலாம் என சந்தேகிப்பதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், கடை உரிமையாளரிடம் விசாரித்த போது, அவர் யாரிடமும் கடன்பட்டிருக்கவில்லை என்றும், அவர்களுக்கு எந்த விரோதமும் இல்லை என்று கூறினார்கள் என்றார் போலீசார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மதியம் 1.30 மணியளவில் ஜாஃபிராபாத்தில் சந்தை கூடும் ஒரு இடத்தில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் அவர்களுக்கு வந்ததாகவும் கூறினார்கள். இந்த சம்பவம் பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும், பைக்கில் வந்து நபர்களின் முகத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்திருப்பதைக் கண்டதாகவும் கூறினார்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்திலிருந்து வெற்று புல்லட் ஷெல்களை போலீசார் சேகரித்துள்ளனர். குற்றம் மற்றும் தடயவியல் குழு அந்த பகுதியை சுற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இருவருமே ஒரு துணிக்கடையை குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.