திரிபுரா முதல்வராக பிப்லாப் டிப் இன்று பதவி ஏற்பு!
திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் டிப் இன்று பதவி ஏற்கிறார்!
திரிபுரா சட்டப் பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி ஆகியவை 43 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் மட்டும் வென்றது.
இதையடுத்து, திரிபுராவில் புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏ-கள் கூட்டம் நடைபெற்றது. அதில் திரிபுரா முதல்வராக பிப்லாப் குமார் தேபும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விப்லப் தேப் ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதை தொடர்ந்து விப்லப் தேப் முதல் மந்திரியாக இன்று பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, வடகிழக்கு பிராந்தியங்களில் பாஜக ஆளும் மூன்று மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.