நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது என பா.ஜ.க திரிபுரா முதலமைச்சர் பிப்லப்தேப் தெரிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுரா மாநிலம், ருத்ரசாகர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், நீர்நிலைகள் அருகில் வாழும் மீனவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு ஐம்பதாயிரம் வாத்து மற்றும் வாத்து குஞ்சுகள் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 


இதனால் கிராம மக்களின் பொருளாதார உயரும் என்று கூறியுள்ளார். மேலும், வாத்துகளினால் தண்ணீர் மறுசுழற்சி அடைவதாகவும், வாத்துகள் நீந்திச் செல்வதால் தண்ணீரில் ஆக்சிஜன் உயருவதாகவும் திரிபுராவில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க முதலமைச்சர் பிப்லப் தேப் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், மொத்தமாக 50,000 வாத்துகள் நீச்சல் அடிக்கும் போது, தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகமாகும். தண்ணீர் மறுசுழற்சி ஆகும். இதனால் மீன்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு அரசு சார்பில் 50,000 வாத்துகள் வழங்கப்படும்" என்றார். முதல்வரின் இந்த பேச்சு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.



ஏற்கனவே, மகாபார காலத்திலேயே இணைய வசதி இருந்ததாக அவர் சர்ச்சைக் கருத்து கூறி இருந்த நிலையில், தற்போது நீரில் வாத்துகள் நீந்துவதால் அக்சிஜன் அளவு உயரும் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.