பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
கேரளா கன்னியாஸ்திரியை பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு வரும் அக்டோபர் 6-ஆம் நாள் வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!
கோட்டையம்: கேரளா கன்னியாஸ்திரியை பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு வரும் அக்டோபர் 6-ஆம் நாள் வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறை மாவட்ட பிஷபாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இதற்கு முன்னதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதரியராக இருந்த போது கன்னியாஸ்திரியை ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டினை அடுத்து பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து பதவி விலகினார். எனினும் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என மறுத்து வருகிறார்.
இவ்வழக்கினை கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை செய்து வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன் காவல்துறையினர் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். எனினும் இந்த வழக்கில் பாதரியாரின் மீது நடவடிக்கைகள் எடுக்க தாமதம் காட்டி வரப்படுகிறது என பாதிக்கப்பட்ட கனயாஸ்திரியை உள்பட பலர் போராட்ட களத்தில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பிராக்கோ மூலக்கல் கடந்த செப்டம்பர் 21-ஆம் நாள் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் பிராங்கோ மூலக்கல் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும் பிராங்கோ மூலக்கலை இரண்டு நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தற்போது முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு வரும் அக்டோபர் 6-ஆம் நாள் வரை நீதிமன்ற காவல் நீட்டித்து பலா மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!