Bizarre Smuggling: 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்
மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்ற கதையை கேள்விப்பட்டதுண்டா?
இம்பால்: கடத்தல் காரர்கள் வினோதமான வழிகளில் பொருட்களை கடத்துகின்றனர் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறோம். பொருட்களை தங்கள் உடல் பகுதிகளில் நூதனமான முறையில் கடத்தல் செய்பவர்கள் மறைக்கிறார்கள் என்ற கதைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
கடத்தல் செய்பவர்கள் பல்வேறு முறைகளில் மோசடி செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும், இப்படி ஒரு தங்கக் கடத்தலைப் பற்றி கேள்விபட்டிருப்பது சந்தேகம் தான்.
தங்கத்தை கடத்த முயற்சித்த இந்தியர் ஒருவர் அவரது மலக்குடலில் தங்க பேஸ்டை மறைத்து வைத்திருந்தார். கடத்தல் நாடகம் அம்பலமானதும் கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான்.
Also Read | காங்கிரஸில் இருந்து விலகுவேன்; ஆனால் பாஜகவில் சேர மாட்டேன்: கேப்டன் அமரீந்தர்
கேரளாவை சேர்ந்த ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை வைத்து கடத்த முயற்சித்த குற்றத்தின் பேரில் இம்பால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்ற அந்த பயணி திங்கள்கிழமை பிற்பகல் 2:40 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் இம்பாலில் இருந்து டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
விமான பயணத்தின்போது செய்யப்பட்ட பாதுகாப்பு சோதனை சோதனையில் கடத்தல்காரர் மாட்டிக் கொண்டார். பாதுகாப்பு சோதனையில், ஸ்கேன் செய்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், பயணியின் மலக்குடல் குழிக்குள் உலோகம் இருப்பதை கவனித்தனர்.
Also Read | கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அவசியமா?
பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியபோது, அவரது மலக்குடலில் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
900 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பேஸ்ட்டின் மதிப்பு 42 லட்சம் மதிப்பு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடத்த முயன்ற பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து அவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவை சேர்ந்த ஒருவர், இம்பாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்வதற்காக இம்பால் விமான நிலையம் வந்தார். பாதுகாப்பு சோதனையின் போது அவர் மாட்டிக் கொண்டார். பின்னர் மருத்துவ பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்ட பயணிக்கு அடிவயிற்றின் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. "அவர் தனது மலக்குடலில் சில உலோக பொருட்களை" மறைத்து வைத்திருப்பதை எக்ஸ்-ரே காட்டியது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தனது மலக்குடலில் தங்க பேஸ்டை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த நபரிடம் இருந்து மொத்தம் நான்கு பொட்டலம் தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Also Read | சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
https://www.facebook.com/ZeeHindustanTamil
https://twitter.com/ZHindustanTamil