தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பச்சோந்தி: மீனாட்சி லேகி
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பாக நவம்பர் 23 அன்று தில்லி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தில்லி சட்டசபையின் ஒரு நாள் அமர்வின் போது புதிதாக சட்டமாக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டத்தின் நகல்களை கிழித்தது தொடர்பாக மீனாக்ஷி லேகி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஒரு புதிய வகை பச்சோந்தி என குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 23 அன்று தில்லி அரசு மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், இன்று அவர் இந்தச் சட்டத்தின் நகல்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறார் என மீனாக்ஷி லேலி சாடியுள்ளார்.மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பாக நவம்பர் 23 அன்று தில்லி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்போது,
அதே சட்டத்தின் நகல்களை அவர்கள் தில்லி (Delhi) சட்டமன்றத்தில் கிழிக்கிறார்கள். இது சந்தர்ப்பவாத அரசியல். டெல்லி முதல்வர் ஒரு பச்சோந்தி என்பதை நிரூபித்துள்ளார், அவர் சந்திப்பத்திற்கு ஏற்றவாறு வண்ணங்களை மாற்றிக் கொள்கிறார் என மீனாக்ஷி லேகி குற்றம் சாட்டினார்.
புதிய வேளாண் சட்டங்களை (Farm Laws) எதிர்த்து தில்லி சட்டமன்றத்தின் ஒருநாள் கூட்டத்தொடரில் வியாழக்கிழமை, அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று விவசாய சட்டங்களின் நகல்களை கிழித்து எறிந்தார்.
ALSO READ | Farmers Protest: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த Supreme Court
தில்லியில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் நிறைந்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், இரு நாட்களுக்கு முன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மற்றும் தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள், உத்தரகண்ட் (uttarakhand) மற்றும் ஹரியானா (Haryana) மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், ஆகியோர் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பண்ணை சட்டங்களை ஆதரித்துள்ளனர்.
ALSO READ | வேளாண் சட்டத்திற்கு பெருகும் ஆதரவு... போராட்டம் வலுவை இழக்கிறதா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR