புதுடில்லி: கலிபோர்னியாவைச் சேர்ந்த காஷ்மீரி பிரிவினைவாதியான டோனி ஆஷாயுடன் ஷாருக்கான் (Shahrukh Khan) மற்றும் அவரது மனைவி கௌரி கான் இருக்கும் படங்கள் வெளிவந்ததிலிருந்து பாலிவுட் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது. டோனி இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் இளைஞர்களை தூண்டும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல பாடகரும் ஆர்வலருமான அல் இஸ்கந்தர் @TheSkandar ட்விட்டரில் தொடர்ச்சியாக பல ட்வீட்களை வெளியிட்டு, ஆஸிஸ் ஆஷாய் என்றழைக்கப்படும் டோனி ஆஷாய் ISI ஆதரவு பெற்ற ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் (JKLF) உறுப்பினராக இருந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.


ஆஷாயின் பயங்கரவாதத்தைத் தூண்டும் சில ட்வீட்களை மேற்கோள் காட்டி, அல் இஸ்கந்தர், “ஆஷாய் கலிபோர்னியாவின் வசதியான அறைகளில் அமர்ந்துகொண்டு  காஷ்மீரி இளைஞர்களை கற்களையும் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு போராட தூண்டிவிடுகிறார். அதே சமயம்  அவரது சொந்த மகன் பிலால் ஆஷாய் சமீபத்தில் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். " என்று கூறியுள்ளார்.



டோனி ஆஷாய் (Tony Ashai), ஷாருக்கானின் துபாய் கட்டிடங்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்புகளை வடிவமைத்துள்ளார் என்றார் அல் இஸ்கந்தர். ஸ்ரீநகர் ஆர்வலரின் கூற்றுப்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார், ஆஷாயை ஒரு கட்டிடக் கலைஞராக நியமித்தார். கானின் மனைவி கௌரி, ஆஷாயுடன் தனது பல திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.


டோனி ஆஷாய் தனது பாலிவுட் செல்வாக்கைப் பயன்படுத்த, நன்கு திட்டமிடப்பட்ட செயலாக இது இருந்துள்ளது என்றார் அல் இஸ்கந்தர். ஷாருக் கான் ஒரு நாட்டுப்பற்றுடைய நபர். ஆனால் டோனி ஆஷாயின் திட்டங்களைப் பற்றி அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.



JKLF செய்த நிதியுதவியின் பேரில், அஜீஸ் அஷாய் (டோனி ஆஷாய்) அமெரிக்காவின் பஃபேலோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தார். மேலும் ஆஷாய் டிசைன் என்ற அவரது முதல் தொழில் முயற்சிக்கும் JKLF தான் நிதியுதவி அளித்தது என்றும் அல் இஸ்கந்தர் ட்வீட் செய்தார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ஆஷாயின் படங்களை வெளியிட்ட அல் இஸ்கந்தர், ஆஷாய் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பலருடன் தொடர்பு கொண்டுள்ள ISI-யிடமிருந்து ஊதியம் பெருகிறார் என்று கூறினார்.


ALSO READ: Watch: இந்திய பாதுகாப்பு ஆயத்தங்களின் பலம் கூடியது: எதிரிகளை மிரட்ட வருகிறது ’துருவாஸ்த்ரா’


அல் இஸ்கந்தரின் ட்வீட் வைரலானதால், பல ட்விட்டர் பயனர்கள் ஷாருக், அவரது மனைவி மற்றும் டோனியின் பல படங்களை சமூக ஊடகங்களில் தேடினர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மற்றொரு இந்திய எதிர்ப்பு ஆர்வலருடன் அனில் கபூர், சோனம் கபூர், கரண் ஜோஹர் போன்ற நட்சத்திரங்களின் படங்களையும் சிலர் கண்டுபிடித்தனர்.


ட்வீட்டுகளின் சரமாரியான செயல்பாட்டைக் கவனித்து, பாஜகவின் துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, "சில பாலிவுட் பிரமுகர்களின் தனிப்பட்ட மற்றும் வணிக தொடர்புகள் சில பாகிஸ்தானியர்கள் மற்றும் ISI மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆதாரப்பூர்வமான தொடர்புகளை வைத்துள்ள, காஷ்மீரில் வன்முறையை ஆதரிக்கும் சில வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டுப்பற்றுடைய பாலிவுட் நபர்கள் இந்த தொடர்புகளை துண்டித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.