நாங்களும் குறைந்தவர்கள் இல்லை சிவசேனாவை மறைமுகமாக தாக்கிய பாஜக
கூட்டணியை விரும்புகிறோம். அதற்காக எங்களை குறைந்து மதிப்பிட வேண்டாம் என மகாராஷ்டிரா முதலைமைச்சர் தேவேந்திர பத்னாவிசு தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் பிஜேபி மற்றும் சிவசேனா நட்பு தொடர்ந்து இருக்கும். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முழுத்திறமையையும் மீண்டும் நிருபிக்க உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே, அவருக்காக நாங்கள் போராட(தேர்தலில் வேலை செய்ய) தயாராக உள்ளோம். நாங்கள் போராடுவோம். மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிராவில் நாங்கள் பெரிய சகோதரர்களாக இருக்கிறோம். எப்போதும் நாங்கள் தான் அண்ணன். அதே கண்ணோட்டத்தில் தான் மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் முழு கவனம் செலுத்துவோம் எனக் கூறியிருந்தார்.
சஞ்சய் ராவத்தின் பேச்சுக்கு பிறகு, பாஜக தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதாவது நாட்டினுடைய வளர்ச்சிக்கு கூட்டணி வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாட்டை கொள்ளை அடிப்பவர்களுக்கு அதிகாரம் வழங்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் நாங்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். அதற்காக பி.ஜே.பி-க்கு ஆதரவு இல்லை. பாஜக வெற்றி பெற முடியாது. மகாராஷ்டிரா எங்களுக்கு பலம் இல்லை என நினைக்க வேண்டாம். பிஜேபி 2 முதல் 200 இடங்களில் வெற்றி பெற தேவையான வியூகங்கள் அமைத்து வருகிறது." என்று மகாராஷ்டிரா முதலைமைச்சர் தேவேந்திர பத்னாவிசு மறைமுகமாக சிவசேனாவுக்கு பதில் பதிலடி தந்துள்ளது.