Lok Sabha Election 2023: வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன எனலாம். ஒருபக்கம் ஆளும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல், திமுக, சிபிஎம், சிபிஐ என முக்கிய 16 எதிர்கட்சிகள் இணைந்து கூட்டத்தை நடத்தியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றிகரமான முதல் கூட்டத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட வியூகம், பிரதமர் வேட்பாளர், அனைத்து மாநில கட்சிகளை இணைப்பதற்கான திட்டம் ஆகியவை குறித்து இரண்டாவது கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. ஜூலை 13, 14ஆம் தேதியில் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதல் கூட்டம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிலையில், இந்த இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் என தெரிகிறது.


2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் வெற்றிக்கண்டது. அதில் காங்கிரஸ் 52, திமுக 23, திரிணாமுல் 22, ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் 18 என இரட்டை இலங்கங்களை மட்டுமே பெற்றனர். 2014இல் இருந்து தொடர்ந்து ஆட்சியை நடத்திவரும் பாஜக தேர்தல் களத்தில் அசைக்க முடியாத ஆலமரமாக வேரூன்றி இருக்கிறது. எனவே, பாஜக அதன் தேர்தலில் பணியில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் என்பதே அரசியல் வல்லுநர்களின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் மக்களவை தேர்தலுக்கான பணியை பாஜக தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | முதல்வரின் ராஜினாமா கடிதம் கிழிப்பு... பதவியில் தொடரும் பைரன் சிங் - மணிப்பூரில் பரபர!


மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக விரைவில் கடைமட்ட தொண்டர்களுக்கும் எடுத்துச் செல்லும் என்றும், அதற்காக 543 தொகுதிகளிலும் அமைப்பு வசதிக்காக மூன்று மண்டலங்களைத் தயார் செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. வடக்கு, தெற்கு, கிழக்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் இந்தப் பகுதிகளின் தனிக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மூன்று மண்டலங்கள் என்னென்ன?


கிழக்கு மண்டலத்தில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் இருக்கும். அதன் கூட்டம் ஜூலை 6ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற உள்ளது.


ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், குஜராத், டாமன் தியு-தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஹரியானா ஆகியவை வடக்கு மண்டலத்தில் வைக்கப்பட்டன. இந்த மண்டலத்திற்கு வரும் ஜூலை 7 ஆம் தேதி டெல்லியில் கூட்டம் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது.


தென் மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மும்பை, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் இருக்கும். இந்த மண்டலத்திற்கான கூட்டம் ஜூலை 8ஆம் தேதி ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்கள்


இக்கூட்டங்களில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமைப்பு அமைச்சர்களுடன் அந்த பகுதியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டங்களில் அந்தந்த மாநிலங்களின் பொறுப்பாளர்கள், மாநில தலைவர், மாநில அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர், எம்பி, எம்எல்ஏ, மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.


தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை வலியுறுத்தும் வகையில், இந்த அனைத்து பகுதிகளுக்கும் வெவ்வேறு உத்திகள் மற்றும் சிக்கல்களை பாஜக முடிவு செய்யும் என கூறப்படுகிறது. இந்தக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.


மேலும் படிக்க | வருமானத்துடன் சமூக ஊடக வருவாயை காட்டாதது ஏன்? வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ