உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.


இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் 28-வது அளுநராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார். அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் பதவி பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.


பதவியேற்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யாநாத், முன்னாள் ஆளுநர் ராம் நாயக் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.


நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையினை ஆனந்திபென் பெற்றுள்ளார். வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலக்கட்டத்தில் 15-8-1947 முதல் 2-3-1949 வரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஒன்றிணைந்த மாகாணத்தின் கவர்னராக ’கவிக்குயில்’ சரோஜினி வகித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.