நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 5 வழிகள் -சுப்பிரமணிய சுவாமி!
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 5 வழிகளை தெரிவித்துள்ளார் சுப்பிரமணிய சுவாமி!
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 5 வழிகளை தெரிவித்துள்ளார் சுப்பிரமணிய சுவாமி!
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 5 வழிகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்.,
தனிநபர் வருமான வரியை ஒழிக்க வேண்டும்
முதன்மை கடன் விகிதத்தை 9% ஆகக் குறைத்தல் வேண்டும்
வங்கி கால வைப்பு வீதத்தை 9% ஆக உயர்த வேண்டும்
நிறுவன ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
உள்கட்டமைப்பை வலுப்படுத்த தாராள நிதி அளித்திட வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்பை அவ்வப்போது தனது குறுகிய ட்விட்டர் பதிவுகள் மூலம் விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. இவரது பதிவு ஒவ்வொன்றும் பல்வேறு கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜக பிரமுகர் என்ற போதும், பாஜக கட்சி செயல்பாடுகளையும் பலமுறை நேரடியாக விமர்சித்துள்ளார் சுவாமி.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் குறித்து விமர்சனத்திற்குறிய பதிவிட்டு காங்கிரசார் எதிர்பினை பெற்றார். முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, மாநிலங்களவையில் இடம்பெற தகுதியானவர் தானா? என ஆராய வேண்டும் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார்.
இந்நிலையில் நாட்டின் பெருளாதாரத்தை மீட்க 5 புதிய வழிகளை தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியனாக உயர்த்துவதற்கு மோடி அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.