மணிப்பூரில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது பாஜக அரசு!
மணிப்பூரில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு : மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜ., 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்ததால், பா.ஜ.,வின் பலம் 33 ஆக அதிகரித்தது. பா.ஜ.,வின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.
இரு கட்சிகளுமே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கவர்னரின் நஜ்மாஹெப்துல்லா அறிவுறுத்தலின்படி இன்று மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 33 உறுப்பினர்கள் பாரதீய ஜனதா தலைமையிலான அரசின் முதல் மந்திரி பிரேன் சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபித்த பாரதீய ஜனதா கட்சி அங்கு ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் சட்ட மன்றத்தின் சபாநாயகராக யும்னம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.