புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாபுல் சுப்ரியோ, கவிஞர் மற்றும் பாடகர். 2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ, அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியிலிருந்தே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் த்ரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார்


முன்னதாக, தான் அரசியலில் இருந்து விலகுவதாக சுப்ரியோ அறிவித்திருந்தார், ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவதால் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.  



அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது பாபுல் சுப்ரியோவின் பதவி பறிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த வேறு சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனவே அவர் கட்சியில் இருந்து விலகக்கூடும் என்று கூறப்பட்டது.
 
இந்தநிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பாபுல் சுப்ரியோ அறிவித்திருந்தார்.  ’விடை பெறுகிறேன். நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சிகளும் என்னை அழைக்கவில்லை. நான் எங்கும் செல்லவில்லை.


Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


சமூக பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்துவிடுவேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வேன்' என்று தெரிவித்திருந்த அவர், தற்போது திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.


இந்நிலையில் இதுவரை 'Z' பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த பாபுல் சுப்ரியோவிற்கு   அளிக்கப்பட்ட பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் 'Y' வகைக்கு மாற்றியது.


அச்சுறுத்தல் கருத்து அறிக்கையின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு வகையான 'Z' பிரிவில் இருந்து அவர் 'Y' வகைக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து, பாபுல் சுப்ரியோவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பொறுப்பான மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அவரது பாதுகாப்பைக் குறைக்கும் செயல்முறையைத் தொடங்கியது.


ALSO READ | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR