பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் (62) டெல்லியில் காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமடைந்தார். 


ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்வானர் பாஜக எம்.பி. சன்வர்லால் ஜாட். பிரதமர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை வரை நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய நீர்வள துறை இணையமைச்சராக இருந்தவர் சன்வர்லால். 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயங்கி விழுந்த சன்வர்லாலிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சன்வர்லால் இன்று அதிகாலை மரணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.