எடியூரப்பா, கர்நாடக முதல்வராவதில் இப்படி ஒரு சிக்கலா?...
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க கோரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முட்டு கட்டையாய் எடியூரப்பாவின் வயது அமைந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க கோரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முட்டு கட்டையாய் எடியூரப்பாவின் வயது அமைந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தது என பல காரணங்கள் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்தது.
இதனையடுத்து கர்நாடக பாஜக தலைவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தகவல்கள் வெளியானது, ஆனால் இதுவரை எடியூரப்பா மௌனம் சாதித்து வருகின்றார்.
இதற்கு 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது, எனினும் எடியூரப்பாவின் வயதும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பாவிற்கு தற்போது 76 வயது ஆகிறது. பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரசு நிர்வாகத்திலும், தீவிர அரசியலிலும் இருக்க வேண்டாம் என்ற விதி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே 75 வயதைக் கடந்து விட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எம்.பி. பதவி கூட அளிக்கப்படவில்லை.
75 வயதைக் கடந்ததால் குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் பதவி விலகினார். விஜய் ரூபானி புதிய முதல்வராகப் பதவியேற்றார். இதன்படி கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு 76 வயதாகிறது. அவரது வயது தடையாக இருப்பதால் அவருக்கு பதில் வேறு ஒருவரைத் தேர்வு செய்யலாமா என்ற எண்ணத்தில் பாஜக தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம் பாஜக-வின் 75 வயது விதிக்கு விதிவிலக்காய் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவரும், பாஜக மூத்த தலைவருமான கல்ராஜ் மிஷ்ரா 78-வயது எட்டிய நிலையில் தற்போது ஹிம்மாச்சல் ஆளுநராக பதவியேற்றுள்ளார். கல்ராஜ் மிஷ்ரா போல், எடியூரப்பாவிற்கும் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.