நடைப்பெறும் மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இவருடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் பங்கேற்று இருந்தார்.


செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித் ஷா தெரிவிக்கையில்., நடைபெறும் மக்களவை தேர்தல் முடிவில் பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்.



மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளோம். நாடு முழுவதும், பிரதமர் மோடி 142 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 


கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவுடன் வரலாற்று வெற்றி பெற்றோம். மீண்டும் மோடி அரசு மத்தியில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. 2014-ஆம் ஆண்டு சட்டசபையை விட தற்போது கூடுதலாக பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளோம்.


பாஜக-வின் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்தோம். கடந்த 5 ஆண்டுகளில் 133 திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வீடு, சமையல் காஸ் என பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்களில் 50 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார். 


மேலும் மோடியின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவே உணர்கின்றனர். ஊழல், பணவீக்கம் விலைவாசி பாஜக ஆட்சியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.