மம்தா வாழ்க்கை படமான Baghini மீது நடவடிக்கை கோரும் BJP!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை தழுவிய Baghini திரைப்படத்தை தேர்தல் ஆணையம் தனிக்கை செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை தழுவிய Baghini திரைப்படத்தை தேர்தல் ஆணையம் தனிக்கை செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது!
மேற்கு வங்க முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அவர்களின் வாழ்க்கையினை தழுவிய Baghini திரைப்படம் வரும் மே 3-ஆம் நாள் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் மம்தா பானர்ஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இல்லை எனவும், அவரின் வாழ்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை எனவும் இத்திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் பின்கி பால் தெரிவித்துள்ளார்.
எனினும் இத்திரைப்படமானது மக்களவை தேர்தலின் மையப்பகுதியில் வருவதால் வரும் தேர்தலில் இத்திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து மேற்கு வங்க மாநில பாஜக துணை தலைவர் ஜோய் பிரகாஷ் மஜூம்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்., ‘PM Narendra Modi’ திரைப்படத்திற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் Baghini திரைப்படத்திற்கும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையினை அடிப்படையாக கொண்டு உருவான ‘PM Narendra Modi’ திரைப்படத்தினை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் குழு படத்தினை ஆய்வு செய்த பின்னரே வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மம்தா பானர்ஜியின் வாழ்க்கையினை தழுவிய திரைப்படத்தினை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளது, பாஜக-வினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ‘PM Narendra Modi’ திரைப்படத்திற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் Baghini திரைப்படத்திற்கும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
Baghini திரைப்படம் ஆனது கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கி படமாக்கப்பட்டு வந்தது. படத்திற்கு தேவையான வரைகலை அம்சங்களை இணைக்கவும், சிறப்பு கலைகளை இணைக்கவும் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதால் படத்தின் வெளியீட்டிற்கு காலத் தாமதம் நிகழ்ந்துள்ளதாக படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிங்கி பால் தெரிவித்துள்ளார்.