புதுடெல்லி: கர்நாடகத்தில் முதல் அமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்தே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி இடையே அதிருப்தி நிலவி வந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ. என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு முக்கிய காரணம் பாஜக என்று கூறப்படுகிறது. அதாவது பாஜக நிர்வாகிகள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.-க்களிடம் பேரம் பேசி வருவதால், எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரை தங்கள் பக்கம் இழுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கவும், எடியுரப்பா தலைமையிலான ஆட்சி அமைக்கும் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பதவியை ராஜினாமா செய்த 14 எம்.எல்.ஏ.க்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கர்நாடக அரசியலில் விவகாரம் நேற்று பாராளுமன்றத்திலும் ஒலித்தது. காங்கிரஸ் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைகப்பட்டது.


கர்நாடக அரசியலில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணம் பிஜேபி தான் என காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூறிவருகிறது. இந்தநிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் #BJPKidnapsMLAs என்ற ஹேஷ்டேக் டிரண்ட்டாகி வருகிறது.